நாலடியார் | TNPSC Important Notes With PYQ

நூல் குறிப்பு
  •  ஆசிரியர் : சமண முனிவர்கள் பலர்
  •  தொகுத்து அதிகாரம் வகுத்தவர் : பதுமனார்
  •  முப்பாலாகப் பகுத்தவர் : தருமர்
  •  உரைகண்டவர்கள் : பதுமனாரும், தருமரும்
  •  பா வகை : வெண்பா

சிறப்புப் பெயர்கள்:

நாலடி நானூறு வேளாண் வேதம் குட்டித் திருக்குறள்

  • நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்
  • பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் ஆகும்.
  • நாலடியார் பெயர்க்காரணம்: வெண்பாக்கள் அனைத்தும் 4 அடிகளால் அமைந்ததால் 'நாலடி' என்றும், சிறப்பு கருதி 'ஆர்' விகுதி சேர்த்து 'நாலடியார்' என்றும் வழங்கப்பெற்றது.
  •   திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
  •   400 பாடல்களை உடையதால் 'நாலடி நானூறு' எனவும் வழங்கப்பெறும்.
  •   பெருமுத்தரையரைப் பற்றிக் குறிப்பிடும் நூல் நாலடியார்.
  •   நாலடியாரின் உரைகளை உள்ளடக்கிய நூல் நாலடியார் உரை வளம்
  •   நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: ஜி.யு.போப்
அமைப்பு முறை & முப்பால் பகுப்பு

* நாலடியாரில் 40 அதிகாரங்களும், 11 இயல்களும் உள்ளன.

* முப்பால் பகுப்பு:

பால் அதிகாரங்கள் இயல்கள்
அறத்துப்பால் 13 அதிகாரங்கள் 2 இயல்கள்
பொருட்பால் 24 அதிகாரங்கள் 7 இயல்கள்
காமத்துப்பால் / இன்பத்துப்பால் 3 அதிகாரங்கள் 2 இயல்கள்
மொத்தம் 40 அதிகாரங்கள் (400 பாடல்கள்) 11 இயல்கள்
திருக்குறளும் நாலடியாருக்கும் (சிறப்புத் தொடர்கள்)
  • • திருக்குறளுக்கு அடுத்த மற்றும் இணையாக வைத்துப் போற்றப்படும் நூல் நாலடியார்.
  • "ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி"
    (நாலு - நாலடியார்; இரண்டு - திருக்குறள்)
  • "பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்"
    (நாலு - நாலடியார்; இரண்டு - திருக்குறள்)
  • "சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது" என்பது நாலடியாரின் பெருமையைக் குறிக்கும் பழமொழி.
பாடல்கள், சொற்பொருள் மற்றும் விளக்கம்

6 ஆம் வகுப்பு பழைய புத்தகம்

"நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்வினைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு."
- சமணமுனிவர்

* சொற்பொருள்:

நாய்க்கால்: நாயின் கால்
ஈக்கால்: ஈயின் கால்
நன்கணியர்: நன்கு + அணியர்
அணியர் = நெருங்கி இருப்பவர்
என்னாம்: என்ன பயன்?
சேய்மை: தொலைவு
செய்: வயல்
அனையார்: போன்றோர்

பாடல் பொருள்:

நாயின் கால்விரல்கள் இடைவெளியின்றி நெருங்கி இருக்கும். அதனைப்போலச் சிலர் நம்மோடு மிகவும் நெருக்கமாகப் பழகினாலும், ஈயின் கால் அளவுக்குக்கூட நமக்கு உதவ மாட்டார்கள்; அப்படிப்பட்டவர்களின் நட்பால் என்ன பயன்? ஆனால், வாய்க்கால் தொலைவில் உள்ள நீரைக்கொண்டு வந்து வயலுக்குப் பாய்ச்சி பயிர் விளைய உதவும். அதுபோல தூரத்திலிருந்தாலும் நமக்கு உதவும் மனிதர்கள் இருக்கிறார்கள்; எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்களின் நட்பைத் தேடிச் சென்று நாம் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.

அழியச்செல்வம் 7ஆம் வகுப்பு புதிய புத்தகம்

"வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை
மிக்க சிறப்பின் அரசர் செறின்வல்வார்
எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற்று அல்ல பிற."

சொற்பொருள்:

வைப்புழி: பொருள் சேமிக்குமிடம்
கோட்படா: திருடப்படாது
வாய்த்து ஈயில்: கொடுத்தாலும்
கேடில்லை: குறைவுபடாது
வல்வார்: கவர முடியாது
விச்சை: கல்வி
எச்சம்: செல்வம் 

 பாடல் பொருள்:

கல்வியைப் பொருள் போல அறியாதவாறு வைத்திருப்பினும் திருடரால் களவாட முடியாது; பிறருக்குக் கற்றுக்கொடுத்தாலும் குறைவுபடாது; சிறந்த வலிமைமிக்க அரசராலும் கவர முடியாது. ஆதலால் ஒருவர் தம் மக்களுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய உண்மையான செல்வம் கல்வியே ஆகும்; மற்றவை அழியக்கூடியவை என்பதால் நிலையான செல்வம் ஆகாது.

முக்கிய மேற்கோள்கள்
  • • "குறிஞ்சி யழகும் கொடுத்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல கல்வி அழகே அழகு"
  • • "கல்வி கரையில, கற்பவர் நாள்சில"
  • • "பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்"
TNPSC முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)

1. நாலடி நானூறு என அழைக்கப்படும் நூல் எது? [EXAM - 2016 / VIGILANCE STD - DEGREE - 2016]

(A) நான்மணிக்கடிகை
(B) நாலடியார்
(C) இன்னா நாற்பது
(D) இனியவை நாற்பது

2. நாலடியார் நூலின் ஆசிரியர் யார்? [EXECUTIVE OFFICER STD - SSLC - 2016 / IV-2018]

(A) வள்ளுவர்
(B) சுந்தரர்
(C) விளம்பி நாகனார்
(D) சமண முனிவர்

3. கீழ்க்காணும் கூற்றுக்களில் பொருத்தமில்லாததைக் கூறுக: [ASSISTANT JAILOR STD - DEGREE 2016]

I. பெருமுத்தரையர் பற்றிய குறிப்பு நாலடியாரில் உள்ளது. பழமொழியிலும் இடம்பெற்றுள்ளது.
II. கபிலர் பாடிய அறநூல் 'இன்னா நாற்பது'
III. நான்மணிக்கடிகையில் உள்ள நூறு பாடல்களும் நான்கு நான்கு கருத்துக்களைக் கொண்டு இயங்குவது
IV. அம்மை என்னும் வனப்பின்பாற்படும் காரியாசான் இயற்றிய நூல் சிறுபஞ்சமூலம் என்பதாகும்.
(A) II மட்டும் பொருத்தமற்றது
(B) III மட்டும் பொருத்தமற்றது
(C) IV மட்டும் பொருத்தமற்றது
(D) I மட்டும் பொருத்தமற்றது

4. பின்வருவனவற்றில் பொருந்தாததைத் தேர்வு செய்க: [EXECUTIVE OFFICER STD - DEGREE - III-2018]

(A) நாலடியாரில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பகுப்புகள் உள்ளன
(B) நாலடியாரை இயற்றியவர் நல்லாதனார்
(C) நாலடியாரில் 400 வெண்பாக்கள் உள்ளன
(D) 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்பதில் நாலு என்பது நாலடியாரைக் குறிக்கும்

5. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது? [GROUP-II - 2018]

(A) புறநானூறு
(B) நற்றிணை
(C) நாலடியார்
(D) பரிபாடல்

6. நாலடியாருக்கு வழங்கும் சிறப்புப் பெயர் யாது? [JUNIOR INSPECTOR - 2018]

(A) நாவடி நானூறு
(B) நானூறு அடிகள்
(C) நாலடி நான்கு
(D) நாலடி நானூறு

7. பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது? [GROUP-IV - 2019]

(A) இன்னா நாற்பது
(B) நான்மணிக்கடிகை
(C) நாலடியார்
(D) சிறுபஞ்சமூலம்

8. நாலடியார் எனும் நூலைப் பாடியவர்கள் யார்? [JAILOR STD - DEGREE - 2019]

(A) சமண முனிவர்
(B) வைணவர்கள்
(C) நாயன்மார்கள்
(D) பௌத்தத் துறவிகள்

9. நாலடியாரைத் தொகுத்தவர் யார்? [JAILOR STD - DEGREE - 2019]

(A) கபிலர்
(B) அணிலாடு முன்றிலார்
(C) பதுமனார்
(D) முன்றுரையரையனார்

10. 'பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்' என்னும் தொடரில் 'நால்' என்பது எந்த நூலைக் குறிக்கிறது? [EXECUTIVE OFFICER STD - DEGREE - IV-2022]

(A) நான்மணிக்கடிகை
(B) நாலடியார்
(C) களவழி நாற்பது
(D) கார் நாற்பது

11. 'கல்வி அழகே அழகு' என்றும்; 'கல்வி கரையில கற்பவர் நாள் சில' என்றும் கூறும் நூல் எது? [GROUP-II - 2022]

(A) திருக்குறள்
(B) நாலடியார்
(C) திரிகடுகம்
(D) நான்மணிக்கடிகை
Previous Post
No Comment
Add Comment
comment url