தமிழ் இலக்கணம் வகைகள்
தமிழ் இலக்கணம் வகைகள்
தமிழ் இலக்கணம் வகைகள் 6 முதல் 12 வகுப்புவரை தமிழ்நாடு பாடப்புத்தகத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியின் இலக்கணம் (5 வகைப்படும்)
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்
எழுத்துகள் (2 வகைப்படும்)
- முதல் எழுத்து (30 வகைப்படும்)
- சார்பு எழுத்து
சார்பு எழுத்துகள் (10 வகைப்படும்)
- உயிர்மெய்
- ஆய்தம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலுகரம்
- குற்றியலிகரம்
- ஐகாரக்குறுக்கம்
- ஔகாரக் குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஆய்தக் குறுக்கம்
மயங்கொலி எழுத்துகள் (8 வகைப்படும்)
- ண, ன, ந
- ல, ழ, ள
- ர, ற
சுட்டு எழுத்துகள் (3 வகைப்படும்)
- அ, இ, உ
வினா எழுத்துகள் (5 வகைப்படும்)
- ஆ, எ, ஏ, ஓ, யா
இலக்கண அடிப்படையில் சொற்கள் (4 வகைப்படும்)
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
பெயர்ச்சொல் (6 வகைப்படும்)
- பொருட்பெயர்
- இடப்பெயர்
- காலப்பெயர்
- சினைப்பெயர்
- பண்புப்பெயர்
- தொழிற்பெயர்
இடுகுறிப்பெயர் (2 வகைப்படும்)
- இடுகுறிப் பொதுப்பெயர்
- இடுகுறிச் சிறப்புப்பெயர்
காரணப்பெயர் (2 வகைப்படும்)
- காரணப் பொதுப்பெயர்
- காரணச் சிறப்புப்பெயர்
குற்றியலுகரம் (6 வகைப்படும்)
- நெடில்தொடர்க் குற்றியலுகரம்
- ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
- உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
- வன்தொடர்க் குற்றியலுகரம்
- மென்தொடர்க் குற்றியலுகரம்
- இடைத்தொடர்க் குற்றியலுகரம்
குறுக்கம் (4 வகைப்படும்)
- ஐகாரக்குறுக்கம்
- ஔகாரக்குறுக்கம்
- மகரக் குறுக்கம்
- ஆய்தக் குறுக்கம்
வழக்கு (2 வகைப்படும்)
- இயல்பு வழக்கு
- தகுதி வழக்கு
இயல்பு வழக்கு (3 வகைப்படும்)
- இலக்கணமுடையது
- இலக்கணப்போலி
- மருஉ
தகுதி வழக்கு (3 வகைப்படும்)
- இடக்கரடக்கல்
- மங்கலம்
- குழுஉக்குறி
போலி (3 வகைப்படும்)
- முதற்போலி
- இடைப்போலி
- கடைப்போலி
இலக்கிய வகைச்சொற்கள் (4 வகைப்படும்)
- இயற்சொல்
- திரிசொல்
- திசைச்சொல்
- வடசொல்
ஓரெழுத்து ஒரு மொழிகள் (42 எழுத்துகள்)
40 எழுத்துக்கள் நெடில் எழுத்துக்கள், மீதமுள்ள 'நொ', 'து' ஆகிய இரண்டு மட்டும் குறில் எழுத்துக்கள் ஆகும்.
- உயிர் எழுத்துக்கள் (6): ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ
- மகர வரிசை (6): மா, மீ, மூ, மே, மை, மோ
- தகர வரிசை (5): தா, தீ, தூ, தே, தை
- பகர வரிசை (5): பா, பூ, பே, பை, போ
- நகர வரிசை (5): நா, நீ, நே, நை, நோ
- ககர வரிசை (4): கா, கூ, கை, கோ
- சகர வரிசை (4): சா, சீ, சே, சோ
- வகர வரிசை (4): வா, வீ, வை, வௌ
- யகர வரிசை (1): யா
- குறில் எழுத்துக்கள் (2): நொ, து
பதம் (2 வகைப்படும்)
- பகுபதம்
- பகாப்பதம்
பகுபத உறுப்புகள் (6 வகைப்படும்)
- பகுதி
- விகுதி
- சந்தி
- இடைநிலை
- சாரியை
- விகாரம்
ஆகு பெயர் (16 வகைப்படும்)
- பொருளாகு பெயர்
- சினையாகு பெயர்
- காலவாகு பெயர்
- இடவாகு பெயர்
- பண்பாகு பெயர்
- தொழிலாகு பெயர்
- எண்ணலளவையாகு பெயர்
- எடுத்தலளவையாகு பெயர்
- முகத்தலளவையாகு பெயர்
- நீட்டலளவையாகு பெயர்
- கருவியாகுபெயர்
- காரியவாகு பெயர்
- கருத்தாவாகுபெயர்
- கொல்லாகு பெயர்
- உவமையாகு பெயர்
- தானியாகு பெயர்
வினைமுற்று
- தெரிநிலை வினைமுற்று
- குறிப்பு வினைமுற்று
- ஏவல் வினைமுற்று
- வியங்கோள் வினைமுற்று
எச்சம் (2 வகைப்படும்)
- பெயரெச்சம்
- வினையெச்சம்
வேற்றுமை (8 வகைப்படும்)
- முதல் வேற்றுமை: இதற்கு உருபு இல்லை. இதனை எழுவாய் வேற்றுமை என்றும் குறிப்பிடுவர்.
- இரண்டாம் வேற்றுமை: இதன் உருபு 'ஐ'.
- மூன்றாம் வேற்றுமை: உருபுகள் - ஆல், ஆன், ஒடு, ஓடு.
- நான்காம் வேற்றுமை: இதன் உருபு 'கு'.
- ஐந்தாம் வேற்றுமை: உருபுகள் - இல், இன்.
- ஆறாம் வேற்றுமை: உருபுகள் - அது, ஆது, அ.
- ஏழாம் வேற்றுமை: இதன் உருபு 'கண்'.
- எட்டாம் வேற்றுமை: இதற்கு உருபு இல்லை. இதனை விளி வேற்றுமை என்றும் குறிப்பிடுவர்.
தொகைநிலைத்தொடர் (6 வகைப்படும்)
- வேற்றுமைத் தொகை
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- உவமைத்தொகை
- உம்மைத்தொகை
- அன்மொழித் தொகை
தொகாநிலைத் தொடர் (9 வகைப்படும்)
- எழுவாய் தொடர்
- விளித்தொடர்
- வினைமுற்று தொடர்
- பெயரெச்சத் தொடர்
- வினையெச்சத் தொடர்
- வேற்றுமைத் தொடர்
- இடைச்சொல் தொடர்
- உரிச்சொல் தொடர்
- அடுக்குத்தொடர்
புணர்ச்சி (2 வகைப்படும்)
- இயல்பு புணர்ச்சி
- விகாரம் புணர்ச்சி
விகாரம் புணர்ச்சி (3 வகைப்படும்)
- தோன்றல்
- திரிதல்
- கெடுதல்
யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்குரிய உறுப்புகள் (6 வகைப்படும்)
- எழுத்து
- அசை
- சீர்
- தளை
- அடி
- தொடை
யாப்பு இலக்கணத்தின்படி எழுத்துகளை மூன்றாக பிரிப்பர்:
- குறில்
- உயிர்க்குறில் (அ, இ, உ, எ, ஒ)
- உயிர்மெய்க்குறில் (க, சி, மு, போன்றவை)
- நெடில்
- உயிர்நெடில் (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ)
- உயிர்மெய்நெடில் (கா, தீ, பூ, போன்றவை)
- ஒற்று
- மெய்யெழுத்து (க், ங், ச், போன்ற புள்ளி வைத்த எழுத்துக்கள்)
- ஆய்த எழுத்து (ஃ)
அசை (2 வகைப்படும்)
- நேரசை
- நிரையசை
சீர் (4 வகைப்படும்)
- ஓரசைச்சீர்
- ஈரசைச்சீர்
- மூவசைச்சீர்
- நாலசைச்சீர்
தளை (7 வகைப்படும்)
- நேரொன்றாசிரியத்தளை - மா முன் நேர்
- நிரையொன்றாசிரியத்தளை - விளம் முன் நிரை
- இயற்சீர் வெண்டளை - மா முன் நிரை, விளம் முன் நேர்
- வெண்சீர் வெண்டளை - காய் முன் நேர்
- கலித்தளை - காய் முன் நிரை
- ஒன்றிய வஞ்சித்தளை - கனி முன் நிரை
- ஒன்றா வஞ்சித்தளை - கனி முன் நேர்
அடி (5 வகைப்படும்)
- குறளடி: இரண்டு சீர்களைக் கொண்டது.
- சிந்தடி: மூன்று சீர்களைக் கொண்டது.
- அளவடி (நேரடி): நான்கு சீர்களைக் கொண்டது.
- நெடிலடி: ஐந்து சீர்களைக் கொண்டது.
- கழிநெடிலடி: ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது.
தொடை (8 வகைப்படும்)
- மோனைத் தொடை
- எதுகைத் தொடை
- இயைபுத் தொடை
- அளபெடை
- முரண் தொடை
- இரட்டைத் தொடை
- அந்தாதி
- செந்தொடை
பாவகைகள் (4 வகைப்படும்)
- வெண்பா: செப்பலோசை
- ஆசிரியப்பா: அகவலோசை
- கலிப்பா: துள்ளலோசை
- வஞ்சிப்பா: தூங்கலோசை
அளபெடை (2 வகைப்படும்)
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
உயிரளபெடை (3 வகைப்படும்)
- செய்யுளிசை அளபெடை
- இன்னிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை
மொழி (3 வகைப்படும்)
- தனிமொழி
- தொடர்மொழி
- பொதுமொழி
திணை (2 வகைப்படும்)
- உயர்திணை
- அஃறிணை
பால் (5 வகைப்படும்)
- ஆண்பால்
- பெண்பால்
- பலர் பால்
- ஒன்றன் பால்
- பலவின்பால்
இடம் (3 வகைப்படும்)
- தன்மை
- முன்னிலை
- படர்க்கை
வழு (8 வகைப்படும்)
- திணை வழு
- பால் வழு
- இட வழு
- கால வழு
- வினா வழு
- விடை வழு
- மரபு வழு
- எண் வழு
வழுவமைதி (5 வகைப்படும்)
- திணை
- பால்
- இடம்
- காலம்
- மரபு
வினா (6 வகைப்படும்)
- அறிவினா
- அறியா வினா
- ஐயவினா
- கொளல் வினா
- கொடை வினா
- ஏவல் வினா
விடை (8 வகைப்படும்)
- சுட்டு விடை
- மறை விடை
- நேர் விடை
- ஏவல் விடை
- எதிர் வினா விடை
- உற்றது உரைத்தல்
- உறுவது கூறல்
- இனமொழி விடை
பொருள்கோள் (8 வகைப்படும்)
- ஆற்றுநீர் பொருள்கோள்
- மொழிமாற்று பொருள்கோள்
- நிரல்நிறை பொருள்கோள்
- விற்பூட்டு பொருள்கோள்
- தாப்பிசை பொருள்கோள்
- அளைமறி பொருள்கோள்
- கொண்டுகூட்டு பொருள்கோள்
- அடிமறிமாற்று பொருள்கோள்
நிலம் (5 வகைப்படும்)
- குறிஞ்சி: மலையும் மலை சார்ந்த இடமும்.
- முல்லை: காடும் காடு சார்ந்த இடமும்.
- மருதம்: வயலும் வயல் சார்ந்த இடமும்.
- நெய்தல்: கடலும் கடல் சார்ந்த இடமும்.
- பாலை: சுரமும் சுரம் சார்ந்த இடமும் (மணலும் மணல் சார்ந்த இடமும்).
அகத்திணை (5 வகைப்படும்) அன்பின் ஐந்திணைகள்
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- பாலை
புறத்திணை (12 வகைப்படும்)
- வெட்சித்திணை: ஆநிரைகளைக் கவர்ந்து வருதல்.
- கரந்தைத்திணை: ஆநிரைகளை மீட்டு வருதல்.
- வஞ்சித்திணை: போர் தொடுத்துச் செல்லுதல்.
- காஞ்சித்திணை: எதிர்த்து நிற்றல்.
- நொச்சித்திணை: தன் கோட்டை மதிலை காத்தல்.
- உழிஞைத்திணை: பகைவனுடைய கோட்டை மதிலைக் கைப்பற்றுதல்.
- தும்பைத்திணை: போர் புரிதல்.
- வாகைத்திணை: போரில் வெற்றி பெறுதல்.
- பாடான்திணை: ஒருவருடைய கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை ஆகியவற்றைப் புகழ்ந்து பாடுவது.
- பொதுவியல் திணை: வெட்சி முதல் பாடான் வரை உள்ள திணைகளில் கூறப்படாத பொதுவான செய்திகளைக் கூறுவது.
- கைக்கிளை: ஒருதலைக் காமம்.
- பெருந்திணை: பொருந்தாக் காமம்.
வெண்பா (6 வகைப்படும்)
- குறள் வெண்பா
- நேரிசை வெண்பா
- இன்னிசை வெண்பா
- பஃறொடை வெண்பா
- நேரிசைச் சிந்தியல் வெண்பா
- இன்னிசைச் சிந்தியல் வெண்பா
ஆசிரியப்பா (4 வகைப்படும்)
- நேரிசை ஆசிரியப்பா
- இணைக்குறள் ஆசிரியப்பா
- நிலைமண்டில ஆசிரியப்பா
- அடிமறி மண்டில ஆசிரியப்பா